கருக்கலைப்பை எவ்வாறு மேற்கொள்வது
நீங்களாகவே கருக்கலைப்பு செய்யக் கோரலாம். உங்கள் மருத்துவரிடம் (GP) இருந்து ஒரு பரிந்துரை தேவையில்லை, ஆனால் மகப்பேற்று மருத்துவத் துறையுடன் கூடிய மருத்துவமனையை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். கருக்கலைப்பு செய்ய உங்களுக்கு ஏன் விருப்பம் என்பதை மருத்துவமனைக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளும்போது, உங்களுக்கு கடைசியாக எப்போது மாதவிடாய் ஏற்பட்டது என்று கேட்கப்படும். இது உங்கள் கர்ப்பம் எவ்வளவு காலம் நீடிக்கிறது, எவ்வளவு விரைவாக மருத்துவமனையில் உங்களுக்கு ஒரு சந்திப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.
கருக்கலைப்பு செய்ய யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. உங்கள் சம்மதம் இல்லாமல் கருக்கலைப்பு செய்ய முடியாது.
கருக்கலைப்பு இலவசமானது
கருக்கலைப்புச் சட்டத்தின் (lovdata.no) கீழ் நோர்வேயில் வசிக்கும் அனைவருக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. நோர்வேயில் வசிப்பவர்களுக்கு கருக்கலைப்பு இலவசமானது. நோர்வேயில் வசிக்காமல் இங்கு பணிபுரியும் EU/EEA ஊழியர்களும், ஒரு பொது விதியாக, தங்கள் கருக்கலைப்புச் செலவுகள் ஈடுகட்டப்படலாம். நோர்வேயில் சுகாதார சேவை செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டினரின் உரிமை குறித்த கூடுதல் வழிகாட்டுதலைப் பார்க்கவும்.
கருக்கலைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?
மருத்துவமனையில் பரிசோதனைக்காக நீங்கள் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்படுவீர்கள். அங்கு நீங்கள் ஒரு மருத்துவர், தாதி அல்லது மருத்துவிச்சியைச் சந்திப்பீர்கள். பரிசோதனையின் போது, அவர்கள் உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுவார்கள், உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் துடிப்பை செவிமடுப்பார்கள், இரத்த மாதிரியை எடுத்து மகப்பேற்று மருத்துவ பரிசோதனை செய்வார்கள். உங்கள் கர்ப்பம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த அவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வார்கள். உங்கள் கர்ப்பத்தின் காலம், வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முடியுமா அல்லது மருத்துவமனையில் செய்யப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேனை நீங்களே பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆரம்ப கட்டங்களில் கர்ப்பத்தை கலைக்க இரண்டு முறைகள் உள்ளன: சத்திரசிகிச்சை மூலமான கருக்கலைப்பு மற்றும் மருந்து மூலமான கருக்கலைப்பு. கர்ப்பத்தின் 12 வது வாரத்திற்கு முன்பு 90% க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் இப்போது மருந்துகளால் செய்யப்படுகின்றன.
கர்ப்பத்தின் 12 வது வாரம் முடியும் வரை, கருக்கலைப்பு முறையை முடிவு செய்ய நீங்கள் உதவலாம். கர்ப்பத்தின் 12 வது வாரம் முடிந்த பிறகு, மருந்து மூலமான கருக்கலைப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. கருக்கலைப்பு முறைகள் பற்றி இங்கே மேலும் வாசியுங்கள்.
சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் கருக்கலைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது, என்னென்ன சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை விளக்குவார்கள். நீங்கள் கர்ப்பத்தைத் தொடர முடிவு செய்தால், உங்களுக்குத் தேவையான மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும் வழிகாட்டுதலையும் பெறுவீர்கள்.
சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தாமல், புறநிலையான முறையில் தகவல்களையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.
கருக்கலைப்பு செய்யப்படும் வரை நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம்.
வீட்டில் கருக்கலைப்பு
கர்ப்பத்தின் 10 வது வாரத்தின் இறுதி வரை, நீங்கள் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். வீட்டில் கருக்கலைப்புக்கு, முதலில் கர்ப்பம் மேலும் வளர்வதைத் தடுக்கும் மருந்து உங்களுக்கு வழங்கப்படும். மாத்திரை மருத்துவமனையில் எடுக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, உங்கள் உடல் கருவை வெளியேற்ற உதவும் மற்றொரு மருந்தை வழங்குவதற்காக நீங்கள் மருத்துவமனைக்கு வருவீர்கள். தேவைக்கேற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய வலி நிவாரணிகளும் உங்களுக்கு வழங்கப்படும். பின்னர் நீங்கள் வீட்டிற்குச் சென்று வீட்டிலேயே கருக்கலைப்பு செய்து கொள்வீர்கள்.
உங்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லையென்றால் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யக்கூடாது. கருக்கலைப்பு செய்வது உணர்ச்சி ரீதியாக கடினமான விடயமாக இருக்கலாம். சிலர் கடுமையான வலியை அனுபவிப்பார்கள்.
மருத்துவமனையில் கருக்கலைப்பு
நீங்கள் விரும்பினால், உங்கள் கர்ப்பம் எவ்வளவு தூரத்துக்கு இருந்தாலும், மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. கர்ப்பத்தின் பத்தாவது வாரத்திற்குப் பிறகு, வீட்டிலே கருக்கலைப்பு செய்யப்படுவதில்லை.
மருத்துவமனையில் மருந்து மூலமான கருக்கலைப்பு, வீட்டிலே கருக்கலைப்பு செய்வது போலவே செய்யப்படுகிறது, ஆனால் கருக்கலைப்பு முடியும் வரை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள்.
உங்கள் கர்ப்பநிலையின் காலஅளவு, நீங்கள் கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இடத்தைப் பாதிக்கலாம். சில இடங்களில், வெளிநோயாளர் மருத்துவமனைகளில் பகல் நேர சிகிச்சையாக கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன, மற்ற இடங்களில் சிகிச்சை மகப்பேற்று மருத்துவ வார்டுகளில் செய்யப்படுகிறது. தாமதமான கருக்கலைப்புகளின் விஷயத்தில், விசேடமான வலி நிவாரணம் மற்றும் நிபுணத்துவம் தேவைப்படலாம், அதாவது கருக்கலைப்பு ஒரு மகப்பேற்று வார்டில் செய்யப்படுகிறது.
சத்திரசிகிச்சை மூலமான கருக்கலைப்பு, மருத்துவர் யோனி வழியாக கருப்பை குழியை கீறிச் செய்யப்படுகிறது. செயல்முறையின் போது நீங்கள் மயக்க மருந்து எடுத்தவராக இருப்பீர்கள்.
கருக்கலைப்புக்குப் பிறகு
உங்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும் வரை, இடுப்பு அழற்சி நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், குளியல் தொட்டியிலோ, கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ நீங்கள் குளிக்கக்கூடாது. நீங்கள் டம்பான்களைப் பயன்படுத்தவோ அல்லது ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளவோ கூடாது.
கர்ப்பமாக இல்லை என்ற நிலைக்கு உங்கள் உடல் பழகுவதற்கு சில நாட்கள் எடுக்கும். அதாவது, குமட்டல், மார்பக மென்மை மற்றும் பிற அறிகுறிகள் செயல்முறைக்குப் பிறகு சுமார் ஒரு வாரம் வரை தொடரலாம். கர்ப்பம் நீண்டு செல்லச் செல்ல, இந்த அறிகுறிகள் அதிகமாகவும் நீண்டதாகவும் இருக்கலாம். கருக்கலைப்புக்குப் பிறகு அறிகுறிகள் குறையவில்லை என்றால், நீங்கள் இனி கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவரை (GP) அல்லது மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும்.
கருக்கலைப்புக்குப் பிறகு கருத்தடை
நீங்கள் கருக்கலைப்புக்குப் பிறகு விரைவில் மீண்டும் கர்ப்பமாகலாம். எனவே, கருக்கலைப்புக்குப் பிறகு உங்களுக்கு கருத்தடை தேவையா, அப்படியானால், நீங்கள் எந்த வகையான கருத்தடை முறையைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். மருத்துவமனையில் முதற்கட்ட பரிசோதனையின் போது, கருத்தடை குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் 16 வயதுக்குட்பட்டவரா?
நீங்கள் கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், உங்கள் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ற தகவல் மற்றும் வழிகாட்டுதல் என்பவற்றைப் பெறும் உரிமை உங்களுக்கு உள்ளது. கருக்கலைப்பு பற்றி நீங்கள் மருத்துவமனையை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனையைத் தொடர்புகொள்வதற்கான உதவிக்கு உங்கள் சுகாதார பார்வையாளர் அல்லது மருத்துவரிடம் (GP) பேசலாம்.
நீங்கள் 16 வயதுக்குட்பட்டவராக இருந்து கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பினால், ஒரு பொது விதியாக, உங்கள் பெற்றோருக்கோ அல்லது பெற்றோருக்குரிய பொறுப்பில் உள்ள மற்றவர்களுக்கோ சுகாதார சேவையால் அதுபற்றித் தெரிவிக்கப்படும். பலருக்கு, பெற்றோரின் ஆதரவு முக்கியமானதாக இருக்கும். உங்கள் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதற்கு நல்ல காரணங்கள் இருந்தால், அது மதிக்கப்படும்.
கருக்கலைப்பு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வது கர்ப்பமாக இருக்கும் நீங்கள்தான். நீங்கள் 16 வயதுக்குட்பட்டவராக இருந்தாலும் இது பொருந்தும்.
18 வது வாரத்திற்குப் பிறகு கருக்கலைப்பு
கர்ப்பத்தின் 18 வது வாரம் முடிந்த பிறகு (17 வாரங்கள் மற்றும் 6 நாட்கள்) கருக்கலைப்பு செய்ய விரும்பினால், கருக்கலைப்புக்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில காரணங்களின் (நிபந்தனைகள்) அடிப்படையில், உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, கருக்கலைப்பு செய்யலாமா வேண்டாமா என்பதை குழு முடிவு செய்யும். கருக்கலைப்புக்கான நிபந்தனைகள் கருக்கலைப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஏன் கர்ப்பத்தை கலைக்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கும் அறிக்கையை எழுத மருத்துவர் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார். அந்த அறிக்கையை நீங்களே எழுதலாம். மருத்துவர் அந்த அறிக்கையையும் கருக்கலைப்புக்கான கோரிக்கையையும் உங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள கருக்கலைப்பு குழுவிற்கு அனுப்புவார்.
கருக்கலைப்பு குழுக்களின் பட்டியல் (Helsedirektoratet.no)
பல மருத்துவமனைகளில், குழுவுடனான சந்திப்புக்கு முன்னும் பின்னும் ஒரு சமூக சேவையாளருடன் சேர்த்து ஆலோசனை வழங்கப்படும். உங்களுக்கு இது வழங்கப்படவில்லை என்றால், நீங்களே அதைக் கோரலாம்.
உங்கள் விண்ணப்பம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
கருக்கலைப்புக்கான விண்ணப்பம் ஒரு மருத்துவர், சுகாதாரம் அல்லது சமூகப் பணி நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரைக் கொண்ட கருக்கலைப்புக் குழுவால் செயல்படுத்தப்படுகிறது. நீங்கள் விரும்பினால் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யக் கடமைப்பட்டில்லை. சிலருக்கு, வீடியோ மூலம் குழு கூட்டத்தில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுடன் ஒருவரை கூட்டத்திற்கு அழைத்து வரலாம். குழுவுடனான சந்திப்புக்கான உங்கள் பயணச் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கும் உடன் வரும் எந்தவொரு நபருக்கும் உரிமை உண்டு.
குழுக் கூட்டத்தில், நீங்கள் ஏன் கர்ப்பத்தை கலைக்க விரும்புகிறீர்கள் என்பதை இன்னும் விரிவாக விளக்கலாம். கருக்கலைப்புக் குழு நிலைமை குறித்த உங்கள் சொந்த மதிப்பீட்டில் கணிசமான கரிசனையை கொள்ளும்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், வழக்கு தானாகவே இறுதி பரிசீலனைக்காக கருக்கலைப்பு மேல்முறையீட்டு சபைக்கு அனுப்பப்படும். நீங்கள் விரும்பினால் கருக்கலைப்பு மேல்முறையீட்டு சபையின் முன் ஆஜராகவும் உங்களுக்கு உரிமை உண்டு.
உங்களுக்கு யாருடனாவது கதைக்கத் தேவையா?
சிலருக்கு கர்ப்பத்தைத் தொடரலாமா அல்லது கருக்கலைப்பு செய்யலாமா என்பதை முடிவு செய்வது கடினமாக இருக்கும். கருக்கலைப்பு கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலோ அல்லது தாமதமாகவோ செய்யப்பட்டாலும், கருக்கலைப்புக்கான எதிர்வினைகள் மாறுபடும். நிம்மதியாக, சோகமாக அல்லது வெவ்வேறு உணர்ச்சிகளின் கலவையை உணருவது பொதுவானது. ஒருவரிடம் பேசுவது உதவியாக இருக்கும். நீங்கள் நம்பும் நபர்கள் நல்ல உரையாடலுக்கான கூட்டாளர்களாக இருக்கலாம். வேறு யாரிடமாவது பேச வேண்டும் என்றால், நீங்கள் Amathea (அமேதியா) ஐத் தொடர்பு கொள்ளலாம், இது மாநில நிதியுதவியுடன் கூடிய இலவச உளவளத்துணை ஆலோசனை சேவையாகும்.
உங்கள் குடும்ப மருத்துவர், சுகாதார மையம்(GP), மருத்துவமனை, குடும்ப ஆலோசனை அலுவலகம் அல்லது சமூக சேவைகள் அலுவலகத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். கருக்கலைப்புக்கு முன்னும் பின்னும் உங்களுக்கு தகவல் வழங்கக் கூடிய ஒருவரை இங்கே நீங்கள் கண்டறியலாம்.
கருக்கலைப்பு பற்றி நீங்கள் யாரிடம் பேசலாம் என்பது பற்றிய தகவலை 23 32 70 00 என்ற எண்ணில் உள்ள Helsenorge உதவி எண் உங்களுக்கு வழங்க முடியும்.
கருக்கலைப்பு செய்த அனைவருக்கும் பின்தொடர்தல் ஆலோசனைகளுக்கு உரிமை உண்டு. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இதை யார் வழங்குகிறார்கள் என்பது வேறுபடலாம். இது மருத்துவமனை, உங்கள் மருத்துவர்(GP) அல்லது சுகாதார மையத்தால் வழங்கப்படலாம். கருக்கலைப்புக்கு முந்தைய பரிசோதனைக்கு நீங்கள் செல்லும்போது இதைப் பற்றிக் கேட்பது நல்லது. அனைவருக்கும் கருக்கலைப்புக்குப் பின்னர் பின்தொடர்தல் தேவையில்லை, எனவே இது ஒரு தன்னார்வ